search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரீமா கல்லீங்கல்"

    கேரளாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் வீடுகளை இழந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை நடிகைகள் மகிழ்வித்துள்ளனர். #KeralaRain #KeralaFloods
    கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அங்குள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். வெள்ள பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர். ஆனால் வீடுகள் முழுமையாக இழந்தவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் தொடர்ந்து முகாமிலேயே தங்கியுள்ளனர்.

    மாநிலம் உள்ள முகாம்களில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கிறார்கள். இவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். 15 நாட்களுக்கும் மேலாக அவர்கள் முகாமிலேயே தங்கி பரிதவித்து வருகிறார்கள்.

    அவர்களை அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். நிவாரண உதவிகளும் அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    முகாம்களில் சோர்வுடன் இருக்கும் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பார்வதி ஆகியோர் களமிறங்கினர். பத்தனம்திட்டாவில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் மத்தியில் அமர்ந்து பாடல்கள் பாடி அவர்களை மகிழ்வித்தனர்.

    மேலும் அவர்களுடன் செல்பியும் எடுத்து நிவாரண உதவிகளையும் வழங்கினர். தங்களுடன் நடிகைகள் அமர்ந்து பாடுவதை கேட்ட குழந்தைகள், முகாம்களில் தங்கியிருக்கிறோம் என்பதையும் மறந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    இதேபோல பிரபல பின்னணி பாடகி சித்ரா கோழிக்கோடு நிஷாகந்தி என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு சென்றார். அங்கிருந்த பெண்கள் மத்தியில் அமர்ந்து அவர் பாடல்களை பாடி மகிழ்வித்தார். பின்னர் நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கேரள மந்திரி கடகம்பிள்ளை சுரேந்திரன், கலெக்டர் வாசுகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
    மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகைகள் ரிமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீதா மோகன்தாஸ் ஆகியோர் வெளியேறியுள்ளனர். #NadigarSangam #Amma
    கேரள மாநில மலையாள நடிகர்கள் சங்க அம்மாவின் தலைவராக நடிகரும், எம்.பி.யுமான இன்னசென்ட் இருந்து வந்தார். 17 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார். 

    இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் திலீப் சங்க உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நடிகை ரீமா கல்லிங்கல் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தார். நடிகர் சங்கம் உணர்சியற்றதாக இருப்பதாக கூறினார். இதை தொடர்ந்து ரம்யா நம்பீசன், கீதா மோகன்தாஸ் உள்ளிட்ட நான்கு நடிகைகள் சங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.



    கேரளாவில் சினிமாவில் பெண்கள் கூட்டாளி என்ற அமைப்பு சில நடிகைகளால் நடத்தபட்டு வருகிறது. அதில் அவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த அமைப்பு அதிராக பூர்வ பேஸ்புக்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
    ×